2021ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.. ஒரு பார்வை
கொரோனா தாக்கத்தில் இருந்து தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமே மீண்டு வந்த ஆண்டாக 2021 அமைந்துள்ளது.
கொரோனா தாக்கம் குறைந்து தமிழில் வெளிவந்த பல திரைப்படங்கள், மீண்டும் திரையரங்குகளுக்கு உயிர் தந்தது.
கொரோனா மட்டுமின்றி பல விஷயங்கள் 2021ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பெரும் தாக்கங்ககளை ஏற்படுத்தியது.
அப்படி 2021ஆம் ஆண்டில் அனைவரின் கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள் குறித்து, ஒரு பார்வை இதோ..
1. ரசிகர்களை ஷாக்காக்கிய நடிகர் அஜித்தின் அறிவிப்பு
நடிகர் அஜித் தனது பெயருக்கு முன்னால் எந்த பட்டப்பெயரும் போடக்கூடாது என முன்பே அறிவித்தார்.
2. திரை பிரபலங்களின் திருமணம்
* நடிகை ‛கயல்' ஆனந்தி, சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்தார்.
* இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, நிரஞ்சனியை காதலித்து கரம்பிடித்தார்.
* சினேகன் நீண்டகாலமாக தான் காதலித்து வந்த நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்தார்.
* திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகர் விஷ்ணு விஷால், பாட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை இரண்டாம் திருமணம் செய்தார்.
3. திரையுலகம் இழந்த பொக்கிஷங்கள்
நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, ஆர்.என்.ஆர்.மனோகர், காமெடி நடிகர் பாண்டு, வெங்கட்சுபா, இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், கே.வி.ஆனந்த், தாமிரா, ஜோக்கர் துளசி, ‛நல்லெண்ணெய்' சித்ரா, பழம் பெரும் நடிகர் ஸ்ரீகாந்த், மாறன் மற்றும் நிதிஷ் வீரா, பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் ஆகியோரின் மறைவு திரையுலகை உலுக்கியது.
4. ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த சமத்தா - நாகசைத்தாயா விவாகரத்து
காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா - நாகசைத்தாயா, ஜோடி விவாகரத்து பெற்று பிறந்தது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.
5. மீண்டும் மறுபிறவி எடுத்த நடிகை யாஷிகா
நடிகை யாஷிகா ஆனந்த், நள்ளிரவில் காரில் நண்பர்களுடன் விபத்தில் சிக்கினார். இதில் அவரது தோழி இறந்துவிட, படுகாயம் அடைந்து சில மாதங்கள் படுத்த படுக்கயைாக சிகிச்சை பெற்று மீண்டு மறுபிறவி எடுத்து வந்தார் யாஷிகா.
6. தேசிய விருது வென்ற தமிழ் நட்சத்திரங்கள்
* நடிகர் ரஜினிக்கு சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
* நடிகர்கள் தனுஷ், பார்த்திபன், விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இமான், மாஸ்டர் நாக விஷால் ஆகியோருக்கு தேசிய விருதுகள் கிடைத்தன.
7. ஜெய் பீம் சர்ச்சை
படத்தில் இடப்பெற்ற ஒரு காட்சி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இருந்தாலும், எதிர்த்தவர்களை விட, சூர்யாவிற்கு உறுதுணையாக நின்ற கோடிக்கணமாக ரசிகர்களின் ஆதரவு, புரட்சியாக காணப்பட்டது.
8. புது ஸ்டுடியோவை துவங்கிய இசைஞானி
கடந்த 40 ஆண்டுகளாக பிரசாத் லேப்பில் இசை பணிகளை மேற்கொண்டு வந்த இளையராஜா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பின் திநகரில் சொந்தமாக ஸ்டுடியோவை துவங்கி தற்போது இசை பணிகளை கவனித்து வருகிறார்.
9. வடிவேலுவின் கம்பேக்
24ஆம் புலிகேசி படத்தினால் பிரச்சனையில் சிக்கிய நடிகர் வடிவேலு, நீண்ட காலமாக நடிக்கமுடியாமல் இருந்த வந்தார். ஆனால், இந்த ஆண்டு அதனை நீக்கி மீண்டும் நடிக்க வந்து மாஸ் கம்பேக் கொடுத்தார்.
10. திரையரங்கிற்கு மீண்டும் உயிர் தந்த { மாஸ்டர் - டாக்டர் }
முதல் கொரோனா தாக்கம் குறைந்து நீண்ட நாட்கள் கழித்து திரையரங்கில் வெளிவந்த தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் திரையரங்குகளுக்கு மீண்டும் உயிர் தந்தது.
அதனை தொடர்ந்து மீண்டும் வழமையாக கொரோனா 2.0-வினால் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டது. இதன்பின் இரண்டாம் அலை குறைந்தபின் திரையரங்கில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் மீண்டும் திரையரங்கில் வசூலில் பட்டையை கிளப்பியது.