தீவிரமடையும் போர், துபாயில் சிக்கிக்கொண்ட தமிழ் சினிமா நடிகர்... அவர் போட்ட பதிவு

By Yathrika Mar 02, 2026 03:11 PM GMT
Report

போர் பதற்றம்

அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான ராணுவ தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து உலகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக வளைகுடா நாடுகள் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்பதால் பல விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. ஈரான் ராணுவம் துபாயிலுள்ள அமெரிக்க ஆதரவு நிறுவனங்களைத் தாக்கி வருகிறது.

ஐக்கிய அமீரகம் ஈரானின் தாக்குதல்களைச் சமாளிக்கும் வகையில் தாக்குதல் ஏவுகணைகளை வானிலேயே அழித்தும் வருகின்றன.  

தீவிரமடையும் போர், துபாயில் சிக்கிக்கொண்ட தமிழ் சினிமா நடிகர்... அவர் போட்ட பதிவு | Tamil Cinema Actor Stuck In Dubai

சிக்கிய நடிகர்

துபாயில் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்துகொண்டு வருவது அனைவருக்கும் தெரியும். போர் பதற்றம் தொடங்கியதும் ரசிகர்கள் அஜித் குறித்து கேள்வி எழுப்ப அவர் பாதுகாப்பாக இருப்பதாக அவரது மேனேஜர் தரப்பில் தகவல் வந்தது.

தீவிரமடையும் போர், துபாயில் சிக்கிக்கொண்ட தமிழ் சினிமா நடிகர்... அவர் போட்ட பதிவு | Tamil Cinema Actor Stuck In Dubai

அஜித்தை போல் பல பிரபலங்கள், இந்திய மக்கள் பலரும் துபாயில் சிக்கியுள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் வசந்த் ரவியும் துபாயில் உள்ளாராம்.

அவர் தனது இன்ஸ்டாவில், பிளான் செய்ததை விட துபாயில் அதிக நாள் இருப்பது போல் ஆனது, இங்கே சிக்கிக்கொண்டேன். இங்கு நடப்பவை பார்க்கும் போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என பதிவு செய்துள்ளார்.

தீவிரமடையும் போர், துபாயில் சிக்கிக்கொண்ட தமிழ் சினிமா நடிகர்... அவர் போட்ட பதிவு | Tamil Cinema Actor Stuck In Dubai

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US