சிறுவயதில் அஜித்தின் மடியில் உட்கார்ந்து புகைப்படம் எடுத்தது இந்த நடிகரா? தீயாய் பரவு புகைப்படம்
நடிகர் அஜித்
துணிவு படத்தை முடித்த கையோடு அஜித் தனது பைக் டூர் பயணம் ஆரம்பித்து அதில் கவனம் செலுத்தி வந்தார். அவர் செல்லும் இடம் எல்லாம் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பார், அந்த போட்டோக்களும் வைரலாகும்.
கடந்த மே1 அதாவது அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக அடுத்த படத்தின் தகவல் வந்தது. லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ்திருமேனி இயக்க அஜித்தின் புதிய படம் தயாராக இருக்கிறது.
ஆனால் படப்பிடிப்பு எல்லாம் எப்போது, எங்கு தொடங்குகிறது என தெரியவில்லை, படத்தின் பெயர் விடாமுயற்சி என்பது மட்டும் இப்போது வெளியாகியுள்ளது.
சிறுவயது போட்டோ
தற்போது அஜித்தின் இளம் வயது புகைப்படம் ஒன்று வைரலாகிறது, அதில் அவரது மடியில் ஒரு சிறுவன் உட்கார்ந்திருக்கிறார். அவர் வேறுயாரும் இல்லை அட்டகத்தி பட புகழ் நடிகர் தினேஷ் என கூறப்பட்டு வருகிறது.
ஆனால் அவர் அட்டகத்தி தினேஷ் இல்லை என அவருடைய தரப்பில் இருந்து தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அஜித்தின் மடியில் உட்கார்ந்து இருக்கும் சிறுவன் அட்டகத்தி தினேஷ் இல்லை என உறுதியாகியுள்ளது. அஜித் மடியில் உட்கார்ந்து இருக்கும் சிறுவன் அஜித் ரசிகரின் மகனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
புது வீட்டிற்கு செல்வதற்குள் பிக்பாஸ் தாமரை வீட்டில் நேர்ந்த உயிரிழப்பு- சோகத்தில் குடும்பம்