இந்த போட்டோவில் உள்ள டாப் ஹீரோ யார் என தெரிகிறதா? யார்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
திரையுலகில் டாப் ஹீரோக்களாக உள்ள நடிகர்கள் அல்லது நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
சூர்யா
அவர் வேறு யாருமில்லை, ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர் சூர்யா தான். ஆம், நடிகர் சூர்யா சிவகுமாரின் க்யூட்டான சிறு வயது புகைப்படம்தான் வைரலாகி வருகிறது.
சூர்யா தற்போது கருப்பு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த 23ம் தேதி வெளிவந்து பட்டையை கிளப்பியது. வருகிற தீபாவளிக்கு இப்படம் வெளிவர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கருப்பு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜூ நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.