ஜனநாயகன் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள முன்னணி நட்சத்திரம்.. யார் தெரியுமா
ஜனநாயகன்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது ஜனநாயகன் திரைப்படம். இது விஜய்யின் கடைசி படமாகும். கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனநாயகன் படம் வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர்.
[
கேமியோ ரோல்
இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், தவெக கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ ஆகியோரும் இப்படத்தில் கேமியோ ரோலில் வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தில் மற்றொரு நட்சத்திரமும் கேமியோவாக களமிறங்கியுள்ளார். அவர் வேறு யாருமில்லை, படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தான். இப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு அனிருத் நடனமாடி இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
