தமிழில் இருந்து தெலுங்கு திரையுலகிற்கு செல்லும் இயக்குனர்கள் - காரணம் இதுதானா?
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களை வைத்த பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த முன்னணி இயக்குனர்கள் தற்போது தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.
ஆம் இயக்குனர் ஷங்கர் முன்னணி தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
அதேபோல் இயக்குனர் லிங்குசாமியும், ராம்போதினேனி கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படமொன்றை இயக்கி வருகிறார்.
அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாசும் தெலுங்கு படம் இயக்க தயாராகிறார். அதிலும் கதாநாயகனாக ராம் போதினேனி நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இவர்களை போலவே இன்னும் சில இயக்குனர்களும் தெலுங்கு உள்ளிட்ட மற்ற திரையுலகை பக்கம் கவனம் செலுத்த முக்கியமான காரணம் இளம் இயக்குனர்கள் தான் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
இளம் இயக்குனர்கள் தற்போது முன்னணி நட்சத்திரங்களை இயக்கி வருகின்ற காரணத்தினால், முன்னணி இயக்குனர்கள் தற்போது இந்த முடிவு எடுத்துள்ளார்கள் என்று தெரிவிக்கின்றனர்.