தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள்

By Parthiban.A May 30, 2022 02:30 AM GMT
Report

ஏவிஎம் தொடங்கி தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிறுவனங்களை பட்டியலிட்டால் மிகப்பெரிய லிஸ்டே வரும். ஆனால் தற்போது கோலிவுட்டில் ஆக்டிவாக படங்கள் தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் மிக குறைவு தான். அவற்றை பற்றி பார்க்கலாம்.

சன் பிக்சர்ஸ்

சன் டிவி நிறுவனத்தின் சன் பிக்சர்ஸ் முதன் முதலில் தயாரித்த படம் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடத்த அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதன் பிறகு எட்டு வருதுங்க கழித்து சர்க்கார் படத்தை தயாரித்தனர். அதற்கு பிறகு விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன், சூர்யா என தொடர்ந்து டாப் ஹீரோக்களை வைத்து படங்கள் தயாரித்து வருகின்றனர்.

விஜய்யின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்து சன் பிக்சர்ஸ் ரஜினியின் 169வது படத்தை தயாரிக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் | Tamil Film Production Companies List

லைகா புரொடக்ஷன்ஸ்

விஜய்யின் கத்தி தான் லைகா நிறுவனத்தின் முதல் படம். முதல் படத்திலேயே இந்த நிறுவனம் சர்ச்சையை சந்தித்தது. இருப்பினும் கத்தி படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட் ஆனது.

அதற்கு பிறகு தமிழ், தெலுங்கில் எக்கச்சக்க படங்கள் தயாரித்து வருகின்றனர். ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்த லைகா தான் இந்தியன் 2 படத்தையும் தயாரிக்கிறது. ஆனால் அதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்திற்கு பிறகு அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

சமீபத்தில் ரிலீஸ் ஆன டான் படத்தை தயாரித்ததும் லைகா நிறுவனம் தான். அந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து இருக்கிறது. அடுத்த

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் | Tamil Film Production Companies List

ஸ்டுடியோ கிரீன்

2006ல் வந்த சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் படம் தான் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீனின் முதல் படம். அதன் பின் பருத்திவீரன், சிங்கம், சிறுத்தை என சூர்யா, கார்த்தி ஆகியோரின் படங்களை தான் அதிகம் தயாரித்தார் ஞானவேல் ராஜா. இருப்பினும் தற்போது அந்த நிலை மாறி மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிக்கின்றனர்.

அடுத்து விக்ரம் பா.ரஞ்சித் கூட்டணி சேரும் படத்தினை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் | Tamil Film Production Companies List

ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ்

2006ல் தொடங்கி தற்போது வரை 12 படங்கள் தயாரித்து இருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம். சந்தோஷ் சுப்ரமணியம், மதராசபட்டினம், மாற்றான், தனிஒருவன், பிகில் என குறிப்பிடத்தக்க அளவில் அவர்கள் படம் தயாரித்து இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் | Tamil Film Production Companies List

ராஜ்கமல் பிலிம்ஸ்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் 80களில் தொடங்கி தற்போது வரை எக்கச்சக்க படங்கள் தயாரித்து இருக்கிறது. 2019ல் கடாரம் கொண்டான் படத்தை அடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் விக்ரம் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது.  

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் | Tamil Film Production Companies List

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US