வெளிநாட்டில் அதிகம் வசூலித்த டாப் 5 படங்கள்- விஜய், அஜித் படங்கள் லிஸ்டில் இல்லையா?
தமிழ் படங்கள்
இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து தமிழ் சினிமாவில் நிறைய விஷயங்கள் மக்கள் எதிர்ப்பார்ப்பது போல் இல்லை. அதாவது விஜய் நடித்த பீஸ்ட், அஜித் நடித்த வலிமை போன்ற படங்கள் வசூலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் நினைத்தார்கள்.
ஆனால் இப்படங்கள் தோல்வி என இல்லாமல் சாதாரண வசூலை பெற்றது. ஆனால் கமல்ஹாசனின் விக்ரம், சிவகார்த்திகேயனின் டான் போன்ற படங்கள் சாதாரண வசூலை எட்டும் என பார்த்தால் அதிரடி வசூல் வேட்டை நடத்தின.
இப்போது இளம் இயக்குனர் பிரதீப் இயக்கி, நடித்த லவ் டுடே திரைப்படம் படக்குழுவே எதிர்ப்பார்க்காத வகையில் வசூல் வேட்டை நடத்துகிறது. ரூ. 5 கோடியில் தயாரான படம் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது.
டாப் 5 படங்கள்
தற்போது புதிய படங்களின் வசூல் வேட்டை காரணமாக வெளிநாட்டில் அதிகம் வசூலித்த டாப் படங்களில் லிஸ்டில் மாற்றம் நடந்துள்ளது. அங்கு இந்த படங்கள் 15 மில்லியன் டாலருக்கு மேல் வசூலித்துள்ளதாம். தற்போது அங்கு அதிகம் வசூலித்த டாப் 5 படங்களின் விவரத்தை காண்போம்.
- பொன்னியின் செல்வன் 1
- 2.0
- விக்ரம்
- கபாலி
- எந்திரன்
அஸீமை வெளியே அனுப்புங்க.. பிக் பாஸ் வீடே எதிர்பார்ப்பது ஒன்று.. ஆனால் முடிவு?

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
