தமிழ் சினிமாவின் பின்னணி நடன கலைஞர்கள் - ஒரு சிறப்பு பார்வை
தமிழ் சினிமாவின் பின்னணி நடன கலைஞர்கள் - ஒரு சிறப்பு பார்வை தமிழ் திரையுலகில் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் விஷயங்களில் ஒன்று நடனம். இதில் ஹீரோ மட்டுமல்லாமல், அவருடன் இணைந்து பின்னணியில் ஆடும் நடன கலைஞர்களின் நடனமும் ரசிக்கவும் வண்ணம் இருந்தால் மட்டுமே அப்பாடலும், அந்த நடனமும் அனைவருக்கும் பிடிக்கும். அப்படி, ரசிகர்களுக்கு பிடித்தவண்ணம் பின்னணியில் நடனம் ஆடி அசத்திய நடன கலைஞர்கள் குறித்து பார்க்கவிருப்பது தான் இந்த கட்டுரை.
ஹேமா
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பின்னணி நடன கலைஞர்களில் ஒருவர் ஹேமா. இவர் தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடனம் ஆடி இருக்கிறார். தளபதி விஜய்யுடன் மெர்சல், தனுஷுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன், விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்துபோகும், சிம்புவுடன் மாநாடு என பல படத்தின் இடம்பெற்ற பாடல்களில் நடனம் ஆடியிருக்கிறார்.
சதாம்
தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் இன்ட்ரோ பாடல்களில் ஹீரோவையும் தாண்டி ரசிகர்களால் ரசிக்கப்படும் பின்னணி நடன கலைஞர்களில் ஒருவர் சதாம். இவர் விஜய்யின் மாஸ்டர், பைரவா, வேலாயுதம். சிவகார்த்திகேயனுடன் வாருதப்படாத வாலிபர் சங்கம். தனுஷுடன் மாரி. சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் என பல முன்னணி நடிகர்களியுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார்.
விக்னேஷ்
சதாம் போலவே பல ஹீரோக்களின் மாஸ் இன்ட்ரோ பாடல்களுக்கு பின்னணியில் இருந்து நடனம் ஆடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விக்னேஷ். நடனம் மட்டுமின்றி சில திரைப்படங்களில் சில காட்சிகளில் நடித்தும் இருக்கிறார். குறிப்பாக விஜய்யுடன் மாஸ்டர், அஜித்தின் ஆரம்பம், உதயநிதி ஸ்டாலினுடன் ஓகே ஓகே. சிவகார்த்திகேயனின் சீமராஜா மற்றும் தனுஷ், விஜய் சேதுபதி, ரஜினிகாந்த் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பின்னனியில் நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹுமை
முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து இன்ட்ரோ பாடல்களில் பின்னணி ஆடுபவர் ஹுமை. இவருடைய தாய், தந்தை இருவருமே நடன கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அஜித்தின் ஆரம்பம், விஜய்யின் மாஸ்டர், தலைவா, சிம்புவின் ஒஸ்தி, மற்றும் தனுஷ், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார்.
![ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/a97f3756-140f-4d89-8c0b-25cc64bab4c2/25-67a5e0a7da8d6-sm.webp)
ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி News Lankasri
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)