தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம்
திரைப்படங்கள்
பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற சிறப்பு தினங்களில் தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள் ஒளிபரப்பாகும்.

அதுவும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி, தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் படம் என்றால், கண்டிப்பாக TRP-யில் நல்ல வரவேற்பு இருக்கும்.
கலைஞர் டிவி
அப்படி, இந்த தமிழ் புத்தாண்டிற்கு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள திரைப்படம் குறித்து புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா நடிப்பில் உருவாகி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த திரைப்படம் பராசக்தி. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில், வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று கலைஞர் டிவியில் பராசக்தி திரைப்படம் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அதற்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதோ..
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu