தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்டம் ! பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்..
பொன்னியின் செல்வன்
தமிழ் சினிமாவே எதிர்பார்த்த விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. பான் இந்தியளவில் திரைப்படங்கள் ஹிட்டாகி வரும் நிலையில் தற்போது விக்ரம் திரைப்படம் அந்தளவிற்கு வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கிடையே தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக பார்க்கப்படுவது, பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள பொன்னியின் செல்வனின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது அப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது, அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிட்டு விழா தஞ்சாவூரில் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் ஏன் தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்தின் வெறித்தனமான டைட்டில் பாடல் காப்பியா.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ இதோ