இனி புதுப்படங்களை திருட்டு தனமாக இணையத்தில் வெளியிட முடியாது.. தமிழ் ராக்கர்ஸ் டீமை கைது செய்த காவல்துறை!
நூற்றுக்கணக்கான கோடிகள் செலவு செய்து ஆயிரக்கணக்கான கலைஞர்களை வைத்து இரவு, பகல், பனி, மழை என உழைத்து ரசிகர்களுக்கு ஒரு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் அவர்களின் உழைப்பை கொட்டி தீர்த்து அந்த படத்தை ஒரு வழியாக வெளியிடுகிறார்கள்.
பைரசி குழு
ஆனால் மறுப்பக்கம், தமிழ் ராக்கர்ஸ் போன்ற சட்டவிரோத பைரசி குழு திருட்டு தனமாக அந்த படத்தை இணையதளத்தில் வெளியிடுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளது.

கைது
அதைத்தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் வெளிவந்த நிலையில். கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் தனது மொபைல் போன்யை வைத்து அந்த படம் முழுவதையும் ரெகார்ட் செய்த தமிழ் ராக்கர்ஸ் டீமை சேர்ந்த ஜெப் ஸ்டீபன் ராஜை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தில் மட்டுமின்றி தனியாக ஒரு டெலிகிராம் பக்கத்தையும் நடத்தி வருகின்றனர். அந்த பக்கத்திலும் இவர்கள் திருட்டுத்தனமாக எடுத்த படங்களை பதிவு செய்கின்றனர் என்பது காவல்த்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஜெப் ஸ்டீபன் ராஜை சைபர் க்ரைம் போலீசார் ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரணை செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.