தெலுங்கு குக் வித் கோமாளி ஷோவில் தமிழ் சீரியல் பிரபலங்கள்... யாரெல்லாம் பாருங்க, புரொமோ இதோ
குக் வித் கோமாளி
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி.
டென்ஷன் வாழ்க்கை வாழும் மக்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் வகையில் ஒளிபரப்பான இந்த ஷோவின் 6வது சீசன் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழில் ஹிட்டடித்த இந்த ரியாலிட்டி ஷோ ஹிந்தி, கன்னடம் என ஏற்கெனவே ஒளிபரப்பாக தற்போது தெலுங்கில் புதியதாக ஒளிபரப்பாக உள்ளது.
சின்னத்திரை
Cooku With Jathirathnalu என்ற பெயரில் குக் வித் கோமாளி தெலுங்கு நிகழ்ச்சி படு மாஸாக தொடங்கியுள்ளது.
இதில் தமிழ் சின்னத்திரையில் கலக்கிய பல பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். இதில் நடுவர்களில் ஒருவராக ராதா இருக்கிறார், போட்டியாளர்களாக பாபா பாஸ்கர், சுஜிதா, வித்யூலேகா ராமன், கோமதி ப்ரியா, விஷ்ணுகாந்த் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதோ கலகலப்பான முதல் எபிசோட் புரொமோ,
Ready to serve the fun! 🥳#CookuWithJathirathnalu GRAND LAUNCH is here!🍛🎉#CookuWithJathirathnalu Grand launch on 28th June only on #StarMaa pic.twitter.com/sq7qZyTstZ
— Starmaa (@StarMaa) June 23, 2025

முதலமைச்சருக்கே அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை இல்ல; அதனால்தான் அப்போலோ - தமிழிசை தாக்கு! IBC Tamilnadu
