பாலிவுட்டுக்கு படையெடுத்த தமிழ் இயக்குநர்கள் யார் தெரியுமா? லிஸ்ட் இதோ
Bhavya
in பிரபலங்கள்Report this article
தமிழ் சினிமாவில் பல திறமை மிக்க இயக்குநர்கள் உள்ளனர். ஆனால் தற்போது அதில் சிலர் பாலிவுட் பக்கம் சென்றுள்ளனர். அதற்கு முக்கிய காரணம் சம்பளம் தான்.
கோலிவுட்டில் வாங்குவதை விட பல மடங்கு அதிக சம்பளம் பாலிவுட் படங்களை இயக்கினால் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களாக வலம் வரும் இயக்குனர்கள் யார் யார் பாலிவுட் பக்கம் சென்றுள்ளனர் என்பது குறித்து கீழே காணலாம்.
அட்லீ:
அட்லீ ஜவான் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். இவர் இயக்கிய முதல் படமே 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது, மீண்டும் ஒரு பாலிவுட் படத்தை இயக்குகிறார்.
லோகேஷ் கனகராஜ்:
ரஜினி, விஜய் என முக்கிய நடிகர்களை வைத்து தமிழ் சினிமாவில் படங்களை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது பாலிவுட்டில் அமீர்கானை வைத்து ஒரு படத்டதை இயக்க உள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி:
தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து அமரன் படத்தை எடுத்து வசூலில் சாதனை படைத்தார். தற்போது இவர் இந்தியில் ஒரு படத்தை இயக்க உள்ளார். அப்படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.