சுத்தமாக நொருங்கிய விஜய் டிவியின் டிஆர்பி, டாப் 5ல் கூட வரவில்லை... மாஸ் காட்டிய சன் டிவி சீரியல்கள்
சீரியல்கள்
சீரியல்கள் தான் இப்போது வீட்டில் இருக்கும் பெண்களின் உயிர் மூச்சாக உள்ளது.
காலை தொடங்கி இரவு வரை தொடர்ந்து சீரியல்களை எல்லாம் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப தொடங்கிவிட்டார்கள்.
அப்படி சன் மற்றும் விஜய் டிவி சீரியல்களை ஒளிபரப்பி டிஆர்பியிலும் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
டிஆர்பி
வாரா வாரம் தொடர்களின் டிஆர்பி விவரம் வெளிவந்துவிடும். நாம் விரும்பி பார்க்கும் தொடர் டிஆர்பியில் டாப்பில் வந்ததா என ஆர்வமாக பார்க்கும் ரசிகர்கள் பலர் உள்ளார்கள்.
தற்போது கடந்த வாரம் ஒளிபரப்பான தொடர்களின் டிஆர்பி விவரம் வெளியாக ஒரு ஷாக்கிங் விவரம் வந்துள்ளது. அதாவது டாப் 5ல் விஜய் டிவியின் ஒரு சீரியலாவது இடம்பெறும் இந்த வாரம் டாப் 5ல் சன் டிவி தொடர்கள் தான் முழுவதும் வந்துள்ளன.
- கயல்
- சிங்கப்பெண்ணே
- மூன்று முடிச்சு
- மருமகள்
- சுந்தரி
6வது இடத்தில் தான் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இடம்பெற்றுள்ளது.