தமிழ்நாட்டில் முதல்நாள் வசூலில் டாப்பில் உள்ள படங்கள்- அண்ணாத்த எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?
கொரோனா நோய் தொற்று அச்சத்தால் திரையரங்குகளை திறக்க அனுமதிக்காமல் தமிழக அரசு இருந்தது. நோய் தொற்று குறைய முதலில் 50% பார்வையாளர்களை அனுமதித்தார்கள் இப்போது முழு அனுமதி கிடைத்துள்ளது.
எனவே அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிய வண்ணம் உள்ளன. சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இப்போது திரையரங்குகளில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வசூல் வேட்டை நடத்த தொடங்கியுள்ளது.
நேற்று வெளியான இத்திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் ரூ. 34.92 கோடி வசூலித்துள்ளதாம்.
அதன்படி தமிழ்நாட்டில் முதல்நாள் அதிகம் வசூலித்த படங்களில் ரஜினியின் அண்ணாத்த முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் ரஜினியின் 2.0 படம் (ரூ. 33. 58 கோடி), 3வது இடத்தில் விஜய்யின் சர்கார் படமும் (ரூ. 31.62 கோடி) உள்ளது.