புதிதாக துவங்கிய தமிழும் சரஸ்வதியும் சீரியல் - ஆரம்பத்திலேயே சூடுபிடிக்கும் கதைக்களம்
விஜய் தொலைக்காட்சியில் புதிதாக துவங்கும் ஒவ்வொரு சீரியலுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கும்.
அந்த வகையில், தற்போது விஜய் டிவியில் புதிதாக 'தமிழும் சரஸ்வதியும்' என்ற சீரியல் துவங்கியுள்ளது.
இதில் கதாநாயகனாக சின்னத்திரை பிரபலம் தீபக் நடிக்க, தொகுப்பாளினியும் நடிகையுமான நட்ச்சத்திரா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
நேற்று, முதல் எபிசோட் ஒளிபரப்பான நிலையில், இன்று சூடுபிடிக்கும் கதைக்களத்துடன் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்த ப்ரோமோவில், கதாநாயகன் தனது குடும்பத்துடன் தனது மாமன் மகளை பெண் பார்க்க போகிறார்.அவர் 10வது வரையில் தான் படித்துள்ளார் என்று, அந்த பெண் ஹீரோவை நிராகரித்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹீரோவின் தாயார், உன்னைவிட அழகான, அறிவான, நல்ல படித்த பெண்ணை என் மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று சபதம் செய்கிறார்.
இதோ அந்த ப்ரோமோ..
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri