தமிழா தமிழா விருதுகள்
தமிழா தமிழா என்று விவாத நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு ஜீ தொலைகாட்சியில் ஒளிபரப்பக்கின்றது. இந்த நிகழ்ச்சியை இயக்குனர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்குகிறார். தமிழா தமிழாவின் நோக்கமே குரலற்றவர்களின் குரலும் ஒலிக்க வேண்டும் என்பதுதான். இதை தொடர்ந்து தமிழா தமிழாவின் அடுத்த முன்னெடுப்பாக தமிழா தமிழா விருதுகள்- 2022 நடத்தியுள்ளது.
இந்த விருது வழங்கும் விழாவை திரு. கரு.பழனியப்பன் மற்றும் மிர்ச்சி விஜய் இனைந்து தொகுத்து வழங்கினர். தமிழா தமிழா விருதின் நோக்கமே சாமானியனாக இருந்து இந்த சமூகத்திற்கு பங்காற்றிய அறியப்படாத ஹீரோக்களை ஊர் அறிய கௌரவிப்பதே. தமிழா தமிழா என்றுமே மக்களின் கருத்துக்கு குரலாக இருந்துள்ளது. அதைப்போல இந்த சமூகத்தில் மக்கள் பக்கம் நின்று மக்கள் குரலை இருந்த சமூக சேவகர்கள் 12 (பன்னிரெண்டு) பேருக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், மாண்புமிகு தமிழக சுற்றுளா துறை அமைச்சர் திரு.மதிவேந்தன் அவர்கள், கன்னியாகுமாரி MP திரு.விஜய் வசந்த் அவர்கள், ஊடகவியாளர்கள் திரு.நக்கீரன் கோபால் அவர்கள், திரு. கார்த்திகைச்செல்வன், திரைப்பட இயக்குனர் திரு. டி.ஜெ.ஞானவேல் அவர்கள், திரு.RJ பாலாஜி அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட RJ பாலாஜி திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உள்ள ஒரு அரசு பள்ளியை தத்தெடுத்துள்ளார்.இதைப்போல் பல நெகிழ்ச்சியான தருணங்கள் விழா மேடையில் அரங்கேறி காண்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சி 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜீ தமிழ் தொலைக்காட்ச்சியில் மதியம் 12மணிக்கு ஒளிபரப்பாகிறது