மீண்டும் வருகிறது 'தமிழா தமிழா'! கரு.பழனியப்பனுக்கு பதிலாக வரும் புது தொகுப்பாளர் இவர்தான்
ஜீ தமிழ் ததொலைக்கொட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவவற்பை பெற்று வந்த நிகழ்ச்சி தமிழா தமிழா. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கரு பழனியப்பன் அவர்கள் சமீபத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது புது தொகுப்பாளருடன் ஷோ அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
வரும் ஜூலை 16-ம் வததி முதல் ஞாயிறு தோறும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களை பேட்டி எடுத்து பிரபலம் ஆன ஆவுடையப்பன் இப்படி ஒரு ஷோவை எந்த விதத்தில் தொகுத்து வழங்க போகிறார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இது பற்றி அவரிடம் பேசும்போது, 'நான் மக்களில் ஒருவனாக தான் இந்த ஷோவை தொகுத்து வழங்க விரும்புகிறேன். புது முயற்சிக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறேன்' என கூறி உள்ளார்.