உயிருக்கு ஆபத்து.. இந்த நடிகர் தான் காரணம்: தீராத விளையாட்டு பிள்ளை நடிகை அதிர்ச்சி புகார்
நடிகை தனுஸ்ரீ தத்தா தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
தனுஸ்ரீ தத்தா
தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. அவர் சில வருடங்களுக்கு முன் சினிமா துறையில் மீ டூ பரபரப்பாக பேசப்பட்ட நேரத்தில் 'காலா' பட புகழ் நடிகர் நானா படேகர் மீது புகார் சொல்லி சர்ச்சை ஏற்படுத்தி இருந்தார்.
உயிருக்கு ஆபத்து
இந்நிலையில் இன்று தனுஸ்ரீ தத்தா இன்ஸ்டாகிராமில் ஒரு அதிர்ச்சியான பதிவை போட்டிருக்கிறார். அவர் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும், தனக்கு எதாவது நேர்ந்தால் அதற்கு நானா படேகர் மற்றும் அவரது பாலிவுட் மாபியா தான் பொறுப்பு என குறிப்பிட்டு இருக்கிறார்.
இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருமணத்தின் போது விக்னேஷ் சிவன் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்- முதன்முறையாக வெளியானது