சினிமாவை விட்டு விலகிவிடுவேன் - நடிகை டாப்ஸி பேட்டி
நடிகை டாப்சி
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து அஜித்தின் ‘ஆரம்பம்’, லாரன்ஸுடன் ‘காஞ்சனா 2’, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற இவர், அங்கு வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்ததன் மூலம் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

மேலும் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை குறி வைத்து நடித்து வருகிறார்.
சினிமாவை விட்டு விலகிவிடுவேன்
இந்நிலையில் சமீபத்தில் டாப்ஸி அளித்த பேட்டியில் " வாழ்நாள் முழுவதும் நடிக்க எனக்கு ஆசை கிடையாது. ஓரளவிற்கு தேவையான பணத்தை சம்பாதித்தும், ஓய்வெடுக்க முடிவெடுத்துவிட்டால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன். எனக்கு ஆடம்பர வாழ்க்கை பிடிக்காது. என் எண்ண ஓட்டம் நடுத்தர மக்கள் வாழ்க்கை முறையில் நின்றுவிட்டது ".

மேலும் " நான் ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து தான் வாங்குவேன். இன்னும் சொல்லப்போனால் நிறைய பேரம் பேசி தான் பொருட்களை வாங்குவேன். அடிக்கடி விலையுர்ந்த செல்போன், கார் என மாற்ற பிடிக்காது " என்கிறார்.