வாத்தி படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு.. ஆசிரியர்கள் கடும் கண்டனம்
வாத்தி
தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படம் இன்று திரைக்கு வந்து இருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்து வருகிறது.
கல்வியை பற்றியும், அதை வியாபாரமாக்கி அதிகம் பணம் ஈட்டும் தொழிலாக மாற்றிவிட்டவர்கள் பற்றியும் படத்தின் கதை இருக்கிறது.
ஆசிரியர்கள் எதிர்ப்பு
தற்போது ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் வாத்தி படத்திற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
'வாத்தி' என்கிற பெயரே ஆசிரியர்களை கேலி செய்யும் வகையில் தான் இருக்கிறது. சமீப காலமாக காமெடியன்களை ஆசிரியராக நடிக்க வைத்து அவர்களை மோசமாக சித்தரிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆசிரியர்களை கேலி பொருளாக்கி வாத்தி என வைத்திருக்கும் பெயரை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறி இருக்கிறார்.
குஷ்பு மகள்கள் முகத்தை பற்றி வந்த மோசமான ட்ரோல்! அவங்களையாவது விட்டு வைங்க என பதிலடி