அடடே விஜய்யின் ஜனநாயகன் பட டீஸர் இந்த ஸ்பெஷல் தினத்தில் தான் வெளியாகிறதா.. சூப்பர்
ஜனநாயகன்
நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் அடுத்த வருடத்தில் ரிலீஸ் ஆகப்போகிறது.
இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக இருந்தாலும் இந்த படத்தோடு இனி விஜய்யின் புதிய படங்களை திரையில் காண முடியாதே என்ற வருத்தமும் ரசிகர்களிடம் உள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இப்படத்திற்கான படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது, அங்கு விஜய்யை காண மக்கள் குவிந்த வீடியோ எல்லாம் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.
டீஸர் அப்டேட்
ஜனநாயன் படம் அடுத்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் படு மாஸாக நடந்துவர டீஸர் அப்டேட் பற்றி தகவல் வந்துள்ளது.
அதாவது வரும் ஜுன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜனநாயகன் பட டீஸர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
