டெடி திரைவிமர்சனம்
கொரோனா தாக்கம் குறைந்து, படங்கள் திரையரங்குகளில் வெளியாக வந்துகொண்டு இருந்தாலும், சில திரைப்படங்கள் சூநிலை காரணமாக ஓடிடியில் வெளியாக கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் ஆர்யா மற்றும் சாயீஷா நடிப்பில் டெடி திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. மிகவும் வித்யாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்று பார்ப்போம்.
கதைக்களம்
நடிகர் ஆர்யா ஒ.சி.டி பாதிக்கப்பட்ட நபராக நடித்துள்ளார். எந்த கலையை பார்த்தாலும் உடனடியாக கற்று கொள்ளும் திறனும் அவருக்கு இருப்பது கூடுதல் சிறப்பு.
டெடி பொம்மையாக மாறுவது வேற யாருமே இல்லை அவரது மனைவியும் நடிகையுமான சாயிஷா தான். அவர் ஏன் டெடியாக மாறுகிறார்? மீண்டும் சாயிஷாவாக மாறுகிறாரா? இல்லையா? என்பது தான் கதையின் முடிவு.
படத்தை பற்றிய அலசல்
படத்தில் தனது நடிப்பில் குறைவைக்காமல் சிறப்பாக நடித்துள்ளார் ஆர்யா. கரடி பொம்மையின் சேட்டை, மற்றும் நகைச்சுவையான விஷயங்கள் குழந்தைகளை கவர்ந்துள்ளது.
தத்ரூபமான சிஜி எஃபெக்டால் குழந்தைகளுக்கு டெடி படம் பார்த்த உடனே பிடித்து விடும் படமாக அமைந்துள்ளது. ஆனால், திரைக்கதையில் இருக்கும் சில சறுக்கல்களை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.
மெடிக்கல் கிரைம் த்ரில்லர் படத்தில் அழகான டெடி பியரை வைத்து வித்தியாசமாக படத்தை திறமையாக கையாண்டுள்ளார் இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன்.
குழந்தைகளுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் விதமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் வலுவாக வடிவமைத்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.
படத்திற்கு டி. இம்மானின் இசை வலு சேர்த்துள்ளது. மேலும் யுவாவின் ஒளிப்பதிவு சிறந்து விளங்கியுள்ளது.
க்ளாப்ஸ்
ஆர்யாவின் நடிப்பு
தத்ரூபமான சிஜி
டி. இமானின் இசை
ஒளிப்பதிவு
பல்ப்ஸ்
திரைக்கதையில் கொஞ்சம் சறுக்கல்
வில்லன் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துருக்கலாம்
மொத்தத்தில் குழந்தைகள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது இந்த டெடி.