டெடி பட இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.. நீங்களே பாருங்க
ஆர்யா - சாயிஷா இருவரும் திருமணத்திற்கு பிறகு இணைந்து நடித்த படம் டெடி. இப்படத்தை சக்தி சவுந்திரராஜன் இயக்கியிருந்தார்.
மகிழ்திருமேனி, கருணாகரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
டி.இமான் இசையமைத்திருந்த இப்படத்தை, ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார்.
இப்படம் கடந்த மார்ச் மாதம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த வரவேற்பிற்கு ஈடாக சக்தி சவுந்தர்ராஜனுக்கு எம்ஜி ஹெக்டர் ரக கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் ஞானவேல்ராஜா.
இதுகுறித்து பதிவு செய்த சக்தி செளந்திராஜன், " டெடி எப்போதுமே எனக்கு சிறந்த படமாக இருக்கும். அதை மேலும் சிறப்பாக்கும் வகையில் இந்த அற்புதமான செய்லை செய்த ஞானவேல் ராஜாவுக்கு நன்றி '' என பதிவிட்டுள்ளார்.