பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படத்தின் மூன்று நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
டீன்ஸ்
தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தை கையாளும் இயக்குனர்களில் முக்கியமான ஒருவர் பார்த்திபன்.
ஒரே ஒருவரின் நடிப்பில் உருவான ஒத்த செருப்பு, சிங்கிள் சாட்டில் உருவான இரவின் நிழல் என நம்மை வியக்கவைக்கும் பல விஷயங்களை தமிழ் சினிமாவில் செய்துள்ளார்.
இவருடைய அடுத்த படைப்பு தான் டீன்ஸ். சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை வைத்து இப்படத்தை எடுத்துள்ளார். இந்தியன் 2 படம் வெளிவந்த அதே நாளில் டீன்ஸ் வெளிவந்த நிலையிலும், இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வசூல்
இந்த நிலையில், டீன்ஸ் திரைப்படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 50 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது. முதல் நாள் பெரிதும் வசூல் இல்லாத நிலையில், அடுத்தடுத்த நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரித்துள்ளது என்கின்றனர்.

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
