ஐந்து நாட்களில் பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
டீன்ஸ்
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் பார்த்திபன். எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்கி வரும் பார்த்திபன் இரவின் நிழல் படத்திற்கு பின் என்ன வித்தியாசமான கதைக்களத்தை எடுக்கப்போகிறார் என எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், வித்தியசமாக அல்ல சற்று கமர்ஷியலான ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். சிறுவர், சிறுமிகளை வைத்து டீன்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் முதல் நாள் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெறவில்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் மக்களிடையே டீன்ஸ் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. பல திரையரங்கங்களில் கூடுதல் ஷோக்களும் இப்படத்திற்கு கிடைத்துள்ளதாம்.
வசூல்
இந்த நிலையில், டீன்ஸ் திரைப்படம் வெளிவந்து ஐந்து நாட்களை ஆகியுள்ளது. இதுவரை உலகளவில் ரூ. 85 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்று.

பிரபல கிரிக்கெட் வீரர் படுக்கைக்கு அழைத்தார் - முன்னாள் கிரிக்கெட்டர் மகள் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu
