படம் பார்க்க ஆளில்லை.. தியேட்டர்கள் அடுத்த 10 நாட்கள் மூடல்! சினிமா துறையினர் அதிர்ச்சி
தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சினிமா துறையில் இருக்கும் பலரும் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் தமிழ் சினிமாவில் பழைய படங்களை ரீரிலீஸ் செய்து ரசிகர்களை தியேட்டருக்கு இழுக்கும் முயற்சியும் நடந்தது. விஜய்யின் கில்லி உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸ் ஆனது.

தியேட்டர்கள் மூடல்
இந்நிலையில் பல முக்கிய தியேட்டர்களில் படம் பார்க்க ஆள் வராத காரணத்தால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இது தமிழ்நாட்டில் இல்லை தெலுங்கானாவில்.
பொங்கலுக்கு பிறகு தெலுங்கில் பெரிய படங்கள் எதுவும் வராததால் தியேட்டர் வரும் மக்கள் எண்ணிக்கை மிக சிறிய அளவே இருக்கிறதாம். மேலும் ஐபிஎல் போட்டியால் அந்த எண்ணிக்கை மேலும் சரிவை சந்தித்துஉள்ளது.
அதனால் வரும் 17ம் தேதி முதல் அடுத்த 10 நாட்கள் அல்லது இரண்டு வாரங்களுக்கு தியேட்டர்களை மூட இருப்பதாக தெலுங்கானா தியேட்டர்கள் சங்கம் அறிவித்து இருக்கிறது.

அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri