மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ.. காமெடி நடிகர் அதிர்ச்சி குற்றச்சாட்டு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படம் கடந்த ஜூன் 29ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சனங்கள் மற்றும் நல்ல வசூலும் படத்திற்கு கிடைத்தது. தற்போது நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகி மேலும் அதிகம் பேசப்படும் படமாக மாறி இருக்கிறது.
டெலிபோன் ராஜ்
இந்த படம் பற்றி தற்போது பிரபல காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் விமர்சித்து இருக்கிறார். 'அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்' என்ற வடிவேலு காமெடி காட்சியில் நடித்தவர் தான் டெலிபோன் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
"ஜாதியை பற்றி யாரும் பேசாமல் இருந்தாலே அது காலப்போக்கில் அழிந்துவிடும், ஆனால் இப்படி ஜாதி படம் எடுக்கிறேன் என சொல்லி எல்லோரையும் தூண்டி விடுகிறார்கள். ஜாதி என்றால் என்ன என தற்போது சின்ன குழந்தைகள் கூட வந்து கேட்குறாங்க."
நடிகர்களை அடிப்பார்
"நாங்கள் நசுக்கப்படுகிறோம் என சொல்லி ஜாதி பிரச்சார படங்கள் எடுக்கும் மாரி செல்வராஜ் தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்களை அடிக்கிறார், உதைக்கிறார். அவர் அடித்ததை வெளியில் சொன்னால் அடுத்து எந்த வாய்ப்பும் கிடைக்காது என யாரும் வெளியில் சொல்வது இல்லை."
"மாரி செல்வராஜ் அடித்ததால் ஒரு வருடம் தன்னால் நடிக்கவே முடியவில்லை என பெண் ஒருவர் என்னிடம் வாட்சப்பில் கூறினார். அந்த ஆடியோ தற்போதும் என்னிடம் இருக்கிறது."
"மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ என உதயநிதியே கூறி இருக்கிறார், அவர் மற்ற நடிகர்களை அடிப்பதை அவரே கூறிவிட்டார்" என டெலிபோன் ராஜ் பேட்டியில் கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் 7ல் வரப்போகும் பெரிய மாற்றம்! யாருமே எதிர்பார்க்காத ஒன்று