தொலைக்காட்சி பிரபலம் தங்கதுரையின் புதிய வீடு... வாழ்த்த குவிந்த பிரபலங்கள், போட்டோஸ்
தங்கதுரை
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான கலைஞர்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகர் தங்கதுரை.
சின்னத்திரை, பெரிய திரையிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமாகி உள்ளார். காமெடியில் தனி காமெடியாக கடி ஜோக் தங்கதுரையாக மக்களால் கொண்டாடப்படும் இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் எங்கேயும் எப்போதும், மாநகரம், அட்டகத்தி போன்ற பல திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். விஜய்யில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது கடி ஜோக்குகளை அள்ளி வீசி வருகிறார்.

புதிய வீடு
சின்னத்திரை, வெள்ளித்திரை என பிஸியாக வேலை செய்யும் தங்கதுரை பற்றி ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.
அதாவது நடிகர் தங்கதுரை புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார், புதிய வீட்டின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது, அதேபோல் பிரபலங்கள் பலரும் அவரது வீட்டிற்கு சென்று வாழ்த்தியுள்ளனர்.




