நடிகர் கார்த்தியின் 27வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப்போகும் பிரபல சீரியல் நடிகை- அடித்த அதிர்ஷ்டம்
நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி, தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக கொடுத்து ஹிட் பட நாயகனாக வலம் வருபவர்.
தொடர்ந்து ஹிட் கொடுத்த கார்த்தியின் நடிப்பில் கடைசியாக வெளியான ஜப்பான் திரைப்படம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை.
வசூல் மற்றும் விமர்சன ரீதியாக படம் வீழ்ச்சியை தான் கண்டது. இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் 27வது படம் குறித்து தகவல்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

சீரியல் நடிகை
விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த 96 என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் தான் கார்த்தி 27வது படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
பிரேம்குமார் இயக்கத்தில், பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவில், கோவிந்த் வசந்தா இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.
சின்னத்திரையில் இருந்து பிரியா பவானி சங்கர், வாணி போஜன் என பலர் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில் கார்த்தியின் 27வது படத்தில் நாயகியாக பிரபல சீரியல் நடிகை நடிக்க இருக்கிறாராம்.
அவர் வேறுயாரும் இல்லை ஈரமான ரோஜாவே 2 தொடரில் பிரியா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்வாதி தான்.

சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள இந்த ஒரு விதை போதும்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க News Lankasri
நாம் தமிழர் நிர்வாகி கார்த்திகா கைது; தவெக அரசுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu