ஆறு நாட்களில் தேரே இஷ்க் மே படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
தேரே இஷ்க் மே
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிக்கொண்டு இருக்கிறார் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தேரே இஷ்க் மே.
நேரடி இந்தி திரைப்படமாக இருந்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவான இப்படத்தில் க்ரித்தி சனோன் கதாநாயகியாக நடித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் தேரே இஷ்க் மே திரைப்படம் இதுவரை ஆறு நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.
வசூல்
இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தேரே இஷ்க் மே படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
