ஹிந்தியில் தனுஷ் சம்பளம் இவ்வளவு தானா? முந்தைய படத்தை விட இவ்வளவு குறைவா
நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கில் நடிப்பது போலவே அவ்வப்போது ஹிந்தியிலும் படங்கள் நடித்து வருகிறார். தெலுங்கில் குபேரா, தமிழில் இட்லி கடை மற்றும் அதை தொடர்ந்து தற்போது ஹிந்தியில் Tere Ishk Mein என்ற படத்தில் அவர் நடித்து இருக்கிறார்.
தனுஷின் முந்தைய ஹிந்தி படங்களான ராஞ்சனா, அத்ராங்கி ரே போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் உடன் தனுஷ் மீண்டும் கூட்டணி சேர்ந்து Tere Ishk Mein படத்தில் நடித்து இருக்கிறார்.

சம்பளம்
Tere Ishk Mein படத்தில் நடிப்பதற்காக தனுஷ் 15 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறாராம். ஹீரோயின் க்ரித்தி சனோனுக்கு 5 கோடி ரூபாய் தரப்பட்டு இருக்கிறது.
தனுஷ் முன்பு குபேரா படத்தில் பிச்சைக்காரன் ரோலில் நடிப்பதற்காக 30 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக சொல்லப்பட்டது. தற்போது ஹிந்தியில் அதை விட குறைவாக அவர் சம்பளம் வாங்கி இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
