வாரிசு வசூலுக்கு மிகப்பெரிய சிக்கல்! விஜய்க்கு எதிராக கிளம்பிய புது பிரச்சனை
வாரிசு
விஜய் மற்றும் தெலுங்கு இயக்குனர் வம்ஷி பைடிபள்ளி கூட்டணி சேர்ந்திருக்கும் வாரிசு. தமிழில் வாரிசு, தெலுங்கில் வாரிசுடு என்னும் பெயரில் இந்த படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த படம் முழுக்க முழுக்க தமிழ் படம் தான் என விஜய் பீஸ்ட் பட பேட்டியிலேயே கூறி இருந்தார். இருப்பினும் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்கள் தான். இந்நிலையில் தற்போது ஒரு புது சிக்கல் படத்திற்கு வந்திருக்கிறது.

தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம்.. புது பிரச்சனை
தற்போது தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் சங்கமான TFPC ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில் சங்கராந்தி (பொங்கல்) ரிலீஸில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும், மிச்சம் மீதி தியேட்டர்கள் தான் டப்பிங் படங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதனால் வாரிசு படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானாவில் தியேட்டர் கிடைப்பதில் பெரிய சிக்கல் எழுந்திருக்கிறது. இதனால் வசூலும் பெரிய பாதிப்பை அடையும்.
இந்த பிரச்னையை தயாரிப்பாளர் தில் ராஜு சமாளிப்பாரா?