தேசிய அளவிலான போட்டியில் தல அஜித், வெளியான மாஸ் தகவல் !
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம், அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தல அஜித் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பன்முக திறமைகளை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதன்படி சமீபத்தில் அவர் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல அஜித் பங்கேற்க உள்ளதாகவும், இதற்காக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu