விஜய்க்கு கதை சொன்ன இளம் இயக்குனர் ! தளபதி 66 இந்த கூட்டணி இது தானா ?

vijay thalapathy 66
By Jeeva Aug 17, 2021 11:10 AM GMT
Report

தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னையில் நடந்து வருகிறது, அண்மையில் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் மற்றும் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டானது.

இந்நிலையில் பீஸ்ட் படம் முடியும் முன்பே தளபதி 66 படம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டன. அந்த வகையில் விஜயின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி தளபதி விஜய்யிடம் கதை கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த கதை தளபதி விஜய்க்கு பிடித்து பொய் ஓகே கூறியுள்ளதாகவும், ரஜினி படத்தை தேசிங்கு பெரியசாமி முடித்தவுடன் விஜய்யின் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US