தலைவர் 169 படத்தில் நடந்த முக்கிய மாற்றம்! என்ன தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார், இவருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வட்டம் குறித்து நாம் அனைவருக்கும் தெரியும்.
இவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்காக அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும் இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் AGS நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் அல்லது மீண்டும் சன் பிக்சர்ஸ் ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.