14 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
தாய் கிழவி
கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி வெளிவந்த தாய் கிழவி படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவான இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க, ராதிகா சரத்குமார் நடித்திருந்தார். இவருடன் இணைந்து முனீஸ்காந்த், சிங்கம்புலி, அருள்தாஸ், ரேச்சல் ரெபேக்கா, பால சரவணன், முத்துக்குமார் என பலரும் நடித்திருந்தனர்.
வசூல்
இப்படத்தின் வெற்றியை சமீபத்தில் படக்குழுவினர் அனைவரும் இணைந்து கொண்டாடினார்கள். இந்த நிலையில், தாய் கிழவி படம் 14 நாட்களில் உலக அளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலக அளவில் இதுவரை ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri