இரண்டு நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
தாய் கிழவி
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள நடிகை ராதிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம்தான் தாய் கிழவி. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருந்தார்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டின் தலைசிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என பலரும் தங்களது விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

வசூல்
இந்த நிலையில், இரண்டு நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் இரண்டு நாட்களில் தாய் கிழவி படம் ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது.

இது பாக்ஸ் ஆபிஸில் இப்படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பை காட்டுகிறது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.