ஓடிடியில் தாய் கிழவி.. எப்போது வெளியாகிறது தெரியுமா?
தாய் கிழவி
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் தாய் கிழவி. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார்.

மேலும், நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார். அருள்தாஸ், முனீஸ்காந்த், சிங்கம்புலி, பால சரவணன், ரைச்சல் ரபேக்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஓடிடி ரிலீஸ்
திரையரங்கில் ரூ. 83 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியுள்ள தாய் கிழவி திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தாய் கிழவி படம் வெளியாகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு பவுன் தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம் - பட்ஜெட்டில் அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு! IBC Tamilnadu
காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்: பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் News Lankasri