திருடு போட தாலி, சினேகன் பிக்பாஸ் வீட்டில் இருக்க வருத்தப்பட்ட கன்னிகா- ஷாக்கிங் தகவல்
பாடலாசிரியர் சினேகன் இவரை பிக்பாஸ் முதல் சீசனிற்கு முன் யாருக்கும் அவ்வளவாக தெரியாது.
அவர் எழுதிய பாடல்களின் விவரம் தெரிந்ததும் அட இவரா அவ்வளவு அற்புதமான பாடல்கள் எழுதியது என ஆச்சரியப்பட்டவர்கள் பலர் உள்ளார்கள். பிக்பாஸிற்கு பிறகு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பணிபுரிந்து வந்தார்.
இடையில் நீண்டநாள் காதலியான நடிகை கன்னிகாவை திருமணம் செய்துகொண்ட சினேகன் இப்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்.
கன்னிகா தனது பெயரில் ஒரு யூடியூப் பக்கம் வைத்துள்ளார். அதில் அவர் தங்களது காதலை கதையை கூறியபோது ஒரு அதிர்ச்சி செய்தியை ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.
சினேகன் தான் முதலில் காதலை வெளிப்படுத்தியுள்ளார், கன்னிகா 5 மாதம் பதில் சொல்ல எடுத்துக் கொண்டாராம். பின் தனது காதலை சொல்ல கன்னிகா, கார்த்திகை தீபத்தன்று வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றி வைத்து அந்த தீப ஒளியில் தான் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
அப்போது கையில் தாலி, மஞ்சள் கயிறுடன் போய் புரபோஸ் செய்திருக்கிறார். பத்திரமாக தாலியை வைத்துக் கொண்டு இருந்துள்ளார், ஆனால் திடீரென ஒருநாள் தாலி காணாமல் போக அதை நினைத்து வருந்தியுள்ளார் கன்னிகா.
வீடியோ பதிவில் அதை கூற ரசிகர்களும் தங்களது வருத்தத்தை தெரிவிக்கின்றனர்.