தளபதி 66 இயக்குனரை உறுதி செய்த பிரபலம்! வைரலான பதிவு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடைபெற்று வருகிறது, இதில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அடுத்ததாக தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் பிரம்மாண்ட படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
மேலும் தற்போது இதனை உறுதி செய்யும் வகையில் பாடகர் க்ரிஷ் இயக்குனர் வம்சிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விஜய்யுடன் பணிபுரிய உள்ளதையும் கூறியுள்ளார்.
இதோ அந்த பதிவை நீங்களே பாருங்கள்
