சாலையில் சாதாரணமாக பைக் ஓட்டிச்சென்ற தல அஜித், வைரல் வீடியோ..
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் ஜனவரி பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.
இப்படத்தில் இருந்து இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கள் வெளியாகி இருக்கிறது.
அதனையடுத்து வலிமை படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை, ரசிகர்கள் அனைவரும் இதன் அடுத்த அப்டேட்டுக்காக காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் தல அஜித்தின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது தல அஜித் சாலையில் சாதாரணமாக பைக் ஒட்டி செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்
ThalaAjith Recent Video ??#Valimai #Ajithkumar #Thala pic.twitter.com/BSjU119xaQ
— THALA FANS COMMUNITY™ (@TFC_mass) November 28, 2021