தல அஜித்தின் சுட்டித்தனமான மறுபக்கம்...இணையத்தை கலக்கும் புகைப்படம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் நடிப்பில் கடைசியாக H.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது.
பிங்க் என்னும் ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் ஆக உருவாகிய நேர்கொண்ட பார்வை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் H.வினோத் போனி கபூருடன் இணைந்து வலிமை என்னும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தல. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இதற்கிடையில் தல அஜித்தை நடிகராக மட்டும் பார்த்திருக்கும் ரசிகர்களை குஷி படுத்தும் வகையில் அஜித்தின் குறும்புத்தனத்தை வெளிப்படுத்தும் அவரது சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிக பேரால் பகிரப்பட்டு வருகிறது.
இதில் தல தனது ஸ்கூல் குரூப் போட்டோவில் கைகளை தலைமேல் வைத்தபடி naughty-யாக போஸ் கொடுத்து அமர்ந்திருக்கிறார்.
