தளபதி 68ல் இணைந்த பீஸ்ட் பட நடிகை! யார் பாருங்க
விஜய் அடுத்து தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் அந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. விரைவில் விஜய் மற்றும் டீம் லுக் டெஸ்ட் மற்றும் VFX போன்ற விஷயங்களுக்காக வெளிநாட்டுக்கு செல்ல இருக்கின்றனர்.
மேலும் ஜெய், பிரபுதேவா உள்ளிட்ட பல நடிகர்கள் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
அபர்ணா தாஸ்
இந்த படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்க இருக்கிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் நடிகை ஜோதிகாவும் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் தளபதி 68 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
பீஸ்ட் படத்திர்க்கு பிறகு அபர்ணா தாஸ் நடித்த டாடா படம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

