பிரமாண்டமாக எடுக்கப்பட்ட தலைவி படம் ஓடிடி யில் வெளியாகிறதா - ஷாக்கிங் தகவல்

ott thalaivi a.l. vijay kangna ranaut aravid samy
By Kathick Apr 21, 2021 02:20 PM GMT
Report

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாகி வெளியாக காத்துருக்கிறது ‘தலைவி’.

இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்க, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

இப்படத்தை கடந்தாண்டு ஜூன் 26ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிபோனது.

இதையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் மீண்டும் இயங்கத் தொடங்கியதால், படம் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது மீண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக 50% சதவீத இருக்கை மட்டுமே திரையரங்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் இருக்கிறது.

இதனால், தலைவி படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவரவிருக்கிறது என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இதனை தலைவி படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. தலைவி படத்தை முதலில் திரையரங்கில் தான் வெளியிடுவோம், அதன்பின்னர் தான் ஓடிடி-யில் என்றும் படக்குழு கூறியுள்ளதாம்.     

 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US