பூஜையுடன் துவங்கிய தலைநகரம் 2.. வடிவேலு நடிக்கிறாரா..? இல்லையா..?
உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்.சி.
இவர், கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இந்நிலையில், தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இப்படத்திலும் சுந்தர்.சி தான் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
இப்படத்தை வி.இசட்.துரை இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி, ‘6 மெழுவர்த்தி, இருட்டு ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தின் முதல் பாகத்தில் வடிவேலு நடித்திருந்தபோல், இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறாரா..? இல்லையா..? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

