நடிகர் தலைவாசல் விஜய்யின் மகளா இவர்?- பிரபல கிரிக்கெட் வீரருடன் நடந்த நிச்சயதார்த்தம், இதோ ஜோடியின் போட்டோ
தலைவாசல் விஜய்
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்த பிரபலங்களில் ஒருவர் தலைவாசல் விஜய். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ள இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
1992ம் ஆண்டு தலைவாசல் என்ற படத்தில் தான் அறிமுகமாகி இருக்கிறார். 25 வருட சினிமா வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் தலைவாசல் விஜய் அவர்கள் கடைசியாக 100% காதல் என்ற திரைப் படத்தில் நடித்து இருந்தார்.
அதற்கு பின் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘அழகு’ சீரியலில் நடித்து இருந்தார்.
மகளின் நிச்சயதார்த்தம்
தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீனா ஒரு நீச்சல் வீராங்கனை ஆவார். பல நீச்சல் போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்களை பெற்று இருக்கிறார்.
இவருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்திற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாம். அண்மையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்க அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
அஜித்தின் துணிவு படத்தின் Overseas கலெக்ஷன்- முழு விவரம்

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri
