தலைவாசல் விஜய் மகளுக்கு சிம்பிளாக நடந்து முடிந்த திருமணம்- அழகிய ஜோடியின் போட்டோ
தலைவாசல் விஜய் மகள்
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர். இவரது மகள் ஜெயவீனா சிறுவயதில் இருந்தே நீச்சலில் ஆர்வமுடையவராய் திகழ்ந்தார்.
மகளின் வளர்ச்சிக்காகவே தலைவாசல் விஜய் அவருடன் போட்டிகளில் செல்ல வேண்டும் என பல சினிமா, சீரியல் வாய்ப்புகளைத் தவிர்த்து வந்தார்.
ஜெயவீனாவும் நீச்சல் போட்டியில் தமிழ்நாடு தாண்டி சர்வதேச அளவில் பங்கு கொண்டு பதக்கங்களை வென்று வருகிறார்.
நேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும் கலந்துகொண்டு பதக்கம் பெற்றார்.
திருமணம்
தலைவாசல் விஜய் மகளுக்கு ஜெயவீனாவிற்கு கிரிக்கெட் வீரருடன் அண்மையில் திருமணம் நடந்துள்ளது. 17 வயதில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர் அபராஜித்.
2012ம் ஆண்டு நடந்த ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியில் அபராஜித்துக்கு முக்கியப் பங்கு உண்டு, 2013ம் ஆண்டு நடந்து துலிப் கோப்பைப் போட்டியில் இரட்டை சதம் அடித்தார்.
அபராஜித்துக்கும், ஜெயவீனாவிற்கும் திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சியும் அழகாக நடந்து முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இந்த புகைப்படத்தில் இருக்கும் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க