தலைவர் 169 படத்தின் அப்டேட் எப்போது தான் வெளியாகும் ! தேதியுடன் இதோ..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த.
இப்படம் என்னதான் குடும்ப ரசிகர்களை கவர்ந்து வசூல் சாதனை படைத்தாலும், அனைவரிடமும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினி எந்த இயக்குனருடன் இணைந்து பணிபுரிவார் என்பது பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.
அதன்படி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடிப்பார் என்றும், மீண்டும் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்திலே அவர் நடிப்பார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட் அடுத்த மாதம் ரஜினியின் பிறந்தநாள் ஆன 12 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது, எனவே நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
